முதற்பக்கம் பிரிவுகள்
Divisions

நூலகம்  

அறிமுகம்

தொழில் திணைக்களத்தின் நூலகமானது, எழுத்தினாலான, அச்சிடபட்ட,  மற்றும் ஒலி ஔ ஊடகங்களைக் கொண்டுள்ளதுடன் தொழில் துறையின் பரந்த  விடயங்களை உள்ளடக்கிய ஒரேயொரு விசேட ஆராய்ச்சி நூலகம் இதுவாகும்.

இது தொழில் திணைக்களத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ளதுடன் கிழமை நாட்களில் மு.ப. 9.00 மணியி​ருந்து பி.ப. 4.00 மணிவரை திறந்திருக்கும்.

 

அங்கத்துவம்

தொழில் திணைக்களம்,தொழல் மற்றும் தொழிற்சங்க  உறவுகள் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை என்பவற்றின்  ஊழியர்கள் அனைவரும் இதனது நிரந்தர அங்கத்தவர்கள்.                              

 

சேவைகள்

  1. புத்தகங்களை வா டகைக்குக்கொடுத்தல்
  2. குறிப்பெடுத்தல் சேவை ,
  3. நிழல் பிரதியெடுக்கும் சேவை,
  4. பத்திரிகைச்செய்திகளின்சேகரிப்புசேவை
  5. தற்கால விடயங்கள் தொடர்பான சேவை
  6. உள்ளக நூலகக் கடன் சேவை.

 

தொடர்புகட்கு:

அலுவலரின் பெயர்: எஃப்.ஆர்.ஏ.ஜிப்பிரி

பதவி : தலைமை நூலகர்

தொலைபேசி இல: 0112508974

மின்னஞ்சல் முகவரி :  library  dl@yahoo.com

திங்கட்கிழமை, 03 பெப்ரவரி 2020 07:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
நிதிப் பிரிவு

தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதியை மீண்டுவரும் மற்றும் மூலதனச் செலவுகளுக்காகப் பயன் படுத்துதலே இப்பிரிவின் பிரதான தொழிற்பாடாகும். இத்தொழிற்பாடு, நிதி ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகச் செய்யப்படுவதுடன், கணக்குகளைப் பேணி, உரிய நிதி அறிக்கைகளை திறைசேரிக்கு அனுப்புவதையும் உள்ளடக்கும்.

  

பதவி

  தொ.பே.இல                   

ஆணையாளர் (நிதி)

011-2581393

உதவி ஆணையாளர்

011-2369910

உதவி ஆணையாளர்

011-2581415

 

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017 07:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

நிர்வாகப் பிரிவு

அறிமுகம்

நிர்வாகப்பிரிவானதுதொழில் திணைக்களத்துடன் தொடர்பான  பொது நிர்வாகங்கள்  அனைத்தையும் கையாள்கின்றது.   

பிரதான பணிகள்

  • தொழில் திணைக்களத்திற்கான நிலத்தைக்கொள்வனவுசெய்தல், கட்டிடத்தை அமைத்தல் மற்றும் பராமரித்தல் மற்றும்  கட்டிடங்கள் நிலங்களுக்கான  வாடகை கொடுப்பனவைசெய்தல்.
  • கட்டிடச் சேவைகள்  மற்றும் பராமரிப்புகளுக்கான கட்டணங்களை செலுத்துதல்.
  • தொழில் திணைக்களத்தால் உடைமையாக்கப்பட்ட வாகனங்களைப் பராமரித்தல் மற்றும் போக்குவரத்து வசதிகளுடன் தொடர்பான கடமைகளைச் செய்தல்.
  • தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும்     தகவல்கள் தொடர்பான கோரிக்கைகளுக்குப் பதிலளித்தல்.
  • அக்ரகார காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்புறுதிக்கோரல் விண்ணப்பங்கள் மற்றும் முறைப்பாடுகளை காப்புறுதி  நிறுவனத்திற்கு அனுப்புதல்.
  • திணைக்கள அலுவலர்களுக்கான ஆள் அடையாள அட்டைகளை வழங்குதல்.
  • பதவிநிலை அலுவலர்களுக்கான விடுமுறைக் கொடுப்பனவுகள், பயணச்செலவுகள் மற்றும் மாதாந்த முன் நிகழ்ச்சித் திட்ங்களுக்கும் அனுமதி வழங்குதல் மற்றும் அதிகப்படியான மேலதிக நேர வேலை கோரிக்கைகளுக்கான அனுமதியைப் பெறுவதற்காக அமைச்சின் செயலாளருக்கு  அனுப்புதல்.
  • தபாலில் நாளாந்தம் பெற்றுக் கொள்ளும் கடிதங்களை ஒவ்வொரு பிரிவிற்கும் அனுப்புதல் மற்றும் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பெற்றுக் கொள்ளும் கடிதங்களை தபால் திணைக்களத்திற்கு அனுப்புதல்.
  • வெளிப் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்புச் சேவையை நிர்வகித்தல்.
  • தொழில் திணைக்களத்தின் யாவத்தை அலுவலக வளவினுல் உள்ள  திணைக்களத்திற்குச் சொந்தமான அச்சகத்தை நிர்வகித்தல்.
  • தொழில் திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற விசட நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல்.

தொடர்புகளுக்கான விபரங்கள்

மேலதிக தொழில் ஆணையாளர் நாயகம்(நிர்வாகம்

011 - 2581970

தொழில் ஆணையாளர் (நிர்வாகம்)

011 - 2368253

பிரதித் தொழில் ஆணையாளர் (நிர்வாகம்)

011 - 2368063

உதவித் தொழில் ஆணையாளர் )(நிர்வாகம்

011 - 2582709

 

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023 04:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

தொழில் புள்ளிவிபரப் பிரிவு

நாட்டின் முறையாக ஒழுங்கமைந்துள்ள தொழிற்றுறை தொடர்பான புள்ளிவிபரங்களைத் திரட்டும் பணியை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துதல் தொழில் திணைக்களப் புள்ளிவிபரப் பிரிவின் கடமையாகும்.

புள்ளிவிபரப் பிரிவின் பிரதான பணிகள்
தொழில்கள், சம்பளங்கள், வேலை செய்யும் மணித்தியாலங்கள் போன்றவை தொடர்பான புள்ளிவிபரத் தகவல்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல், தொகுத்தல் ஆகியவற்றிற்கு தொழில் திணைக்களத்தின் புள்ளிவிபரப் பிரிவு பொறுப்பாகும் என்பதுடன் நிருவாகப் பதிவுகளை பட்டியல்படுத்துதல் மற்றும் சம்பள விகிதச் சுட்டிகளை கணிப்பது போன்றவற்றில் இந்தப் பிரிவானது கவனம் செலுத்துகிறது. இந்தத் தகவல்களானவை வருடாந்த மற்றும் வருடம் இரு முறை நடாத்தப்படுகின்ற இரண்டு முக்கிய அளவீடுகள் மூலம் திரட்டப்படுகின்றன.


(1)    இப்பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அளவீடுகள்

  • இலங்கையில் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வருடாந்த அளவீடு
  • உண்மையாக வேலையிலிருந்த மணித்தியாலங்கள் மற்றும் சராசரி சம்பாத்தியம் தொடர்பான ஆய்வு


(2)    ஏனைய முக்கிய நடவடிக்கைகள்

  • பொருளாதாரத்தின் பிரதான துறைகளுக்கான சுட்டெண்களைக் கணித்தல்
  • சம்பளச் சபைகள் கட்டளைச்சட்டத்தின் கீழ் தொழில் ஆணையாளர் நாயகத்தினால் நிருணயிக்கப்படுகின்ற குறைந்தபட்ச சம்பளங்களை அடிப்படையாகக் கொண்டு குறைந்தபட்ச சம்பள விகிதச் சுட்டிகளை கணித்தல்
  • வருடாந்த புள்ளிவிபர அறிக்கைகளைத் தயாரித்தலும் வெளியிடலும்
    • இலங்கையில் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வருடாந்த அளவீட்டு அறிக்கை
    • உண்மையாக வேலையிலிருந்த மணித்தியாலங்கள் மற்றும் சராசரி சம்பாத்தியம் தொடர்பான ஆய்வு அறிக்கை
    • இலங்கையின் தொழில் புள்ளிவிபரங்கள்
  • வழக்கமாக தரவுகள் வெளியிடப்படுவது
    • தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம்
    • இலங்கை மத்திய வங்கி


(3)    ஏனைய கடமைகள்

  • அளவீடுகளை  நடாத்துவதற்கும், தொழில் புள்ளிவிபரங்களைத் தொகுத்தல் மற்றும் வெளியீடு செய்தல் ஆகிய நடவடிக்கைளை மேற்கொள்ளுவதற்காக அமைச்சு மற்றும் திணைக்களம் என்பவற்றிற்கு உதவுதல்
  • இந் நாட்டின் சகல உதவித் தொழில் ஆணையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி ஊ.சே.நி செலுத்தத் தயாராக உள்ள நிறுவனங்களின் புதிய பதிவுத் தகவல்களைப் பேணுதல்  

 

பொதுமக்களுக்கான சேவைகள்

தொழில் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்கள் கோரிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும்

 

தொடர்பு விபரங்கள்
பிரதிப் பணிப்பாளர்: (+94)112676114
தொலைநகல்: (+94)112676114
புள்ளிவிபரவியலாளர் : (+94)112676113
புள்ளிவிபர உத்தியோகத்தர் : (+94)112676112
மின்னஞ்சல் : labourst@sltnet.lk

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2023 06:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

திட்டமிடுதல், ஆராய்ச்சி, பயிற்சி அளித்தல் மற்றும் வெளியீட்டுப் பிரிவு

செயற்பணி

திட்டமிடுதல், ஆராய்ச்சி, பயிற்சி அளித்தல் மற்றும் வெளியீட்டுப் பிரிவின் செயற்பணியானது திணைக்களத்தின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் பொருட்டு திறமையுள்ள அலுவலர்களை உருவாக்குவது மற்றும் கைத்தொழில் அமைதியை நலைநாட்டுவதன் பொருட்டு திட்டங்களைத் தயாரித்தல், கொள்கைகளை உருவாக்குவதில் உதவுதல், தரவுகளைச் சேகரித்தல், ஆராய்ச்சிகளை நடாத்துதல் மற்றும் நீண்டகால இடைக்காலத் திட்டங்கள் மற்றும் வருடாந்தத் திட்டங்களை தயாரித்தல்.

 

திட்டமிடுதல், ஆராய்ச்சி, பயிற்சி அளித்தல் பிரிவு

திணைக்களத்தின் வருடாந்த செயற்பாடுகள் தொடர்பான முறையான வழிகாட்டுதலை வழங்குவதற்கு செயற்திறன் கொண்ட திட்டங்களைத் தயாரித்தல் இந்தப் பிரிவினூடாக செயற்படுப்ப்ப்படுகின்றது. அத்துடன் மேற்படி நடவடிக்கைகளின் யாலாண்டு முன்னேற்றங்களைத் தொடர்ந்து செய்வதற்கு திணைக்களத்தின் பல்வேறுப்பட்ட பிரிவுகளினால் சாத்தியமாகின்றது.

நாடுபூராகவுமுள்ள தொழில் அலுவலர்களின் மாதாந்த நாளேடுகளினதும் தொழில் பரிசதைனைகளினதும் தரத்தினைப் பரிசோதனை செய்தல் அத்துடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுதல்களை வழங்குதல்.

 

பயிற்சி வேலைத்திட்டம்

இந்தப் பிரிவினால் திணைக்களத்தின் சகல பயிற்சி நடவடிக்கைகளும் செயற்படுத்தப்படுகின்றன. பிரதானமாகப் பின்வரும் வகையில் பயிற்சிகள் வகைப்படுக்கப்படுகின்றன.

  • திணைக்களத்திற்குச் சேர்க்கப்பட்டுள்ள பயிலுனர் அலுவலர்களுக்கான சேவையிலிருக்கும் போதான பயிற்சித்திட்டங்கள்
  • தொழில் பரிசோதனைகள் தொடர்பான பயிற்சிகள்.
  • தொழிலாளர்கள் தொடர்பான நடவடிக்கைக்கான பயிற்சிகள்.
  • முகாமைத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சிகள்.
  • திணைக்களத்தின் பொறியியலாளர்களுக்கான பயிற்சிகள்.
  • சாரதிகள் மற்றும் சிற்றூழியர்களுக்கான பயிற்சிகள்.
  • சிலிடா (SLIDA) மற்றும் ஏனைய  விவாரி நிறுவனங்களினால் நடாத்தப்படும் பயிற்சிகளுக்கு அலுவலர்களை அனுப்பி வைத்தல்.
  • திணைக்களத்திலுள்ள சகல அலுவலர்களுக்குமான கணனிப் பயிற்சிகள் (இந்தப் பிரிவானது 25 கணனிகளுடனான ஒரு ஆய்வுகூடத்தினை உள்ளடக்கியதாகவுள்ளது)

 

வெளியீடுகள்

திட்டமிடுதல், ஆராய்ச்சி, பயிற்சிப் பிரிவினால் திணைக்களத்திற்காக பின்வரும் சட்டங்களும், கட்டளைச் சட்டங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

  • 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம்
  • 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர்கள் சேமலாப நிதிச் சட்டம்
  • 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை, காரியாலயச் சட்டம்
  • 1941 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம்
  • 1​939 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம்
  • 1983ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடை கொடுப்பனவுச் சட்டம்
  • 1942 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிற்லைகள் கட்டளைச் சட்டம்
  • 1​971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் சட்டம்

நற்பயனளிக்க கூடியதும் மற்றும் சரி நிலையான வெளியிடுகைக்குமான புதிய தொழில்நுட்பத்தினைப் பாவிப்பதன் மூலம் தொழிற்பரிசோதனைகளைப் பலப்படுத்துவதற்கு சர்வதேச தொழில் நிறவனத்தினால் நிதி உதவியளிக்கப்பட்டதும், நடைமுறைப்படுத்தப்படுவதுமான லீசா (LISA) என அழைக்கப்படுவதும், கணனிமயப்படுத்தப்பட்டதுமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் இப்பிரிவினால் நடாத்தப்படுகின்றது.

பயிற்சி அளித்தல் வசதிகளும், கருத்தரங்குளகளுக்குப் பொருத்தமானதும், ஒன்றிணைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளை நடாத்துவதற்குமான முழு வசதிகளுடன் கூடிய “ சீதாவக்கை மனுதவள அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையம்” இப்பிரிவினால் நடாத்திச் செல்லப்படுகின்றது.

 

ஆணையாளர்

திட்டமிடுதல் ஆராய்ச்சி பயிற்சி மற்றும் வெளியீட்டுப் பிரிவு

06வது மாடி, தொழிற் திணைக்களம்,

நாரஹென்பிட்டிய,

கொழும்பு 05

                                   

பிரிவு: +94112582647

LISA பிரிவு: +94112582954

தொலைநகல்: +94112504208

மின்னஞ்சல்: prtlabour@gmail.com

வெள்ளிக்கிழமை, 08 ஜூன் 2018 02:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
<< தொடக்கம் < முன் 1 2 3 அடுத்தது > முடிவு >>

பக்கம் 1 - மொத்தம் 3 இல்