முதற்பக்கம் பிரிவுகள் தொழில் உறவுகள் பிரிவு
தொழில் உறவுகள் பிரிவு

 

இந்தப் பிரிவின் பிரதான பணியானது தொழில் கொள்வோரின் மற்றும் தொலாளரின் உரிமைகளைப் பாதுகாக்கும அதேவேளை, நாட்டின் பொருளாதார முன்நேற்றம், அபிவிருத்தி, உற்பத்திதிறன் ஆகியவற்றை முன்னெடுத்து  செலவதற்காக, கைத்தொழில் மற்றும் பொருளாதார அமைதியை உருவாக்குதலாகும். எனவே, நாட்டினுள் சிறந்ததொரு தொழில் உறவு முறையினூடாக, தொழில் பிணக்குகளை தவிர்க்கும் நோக்கில்  இப்பிரிவு தலையீடுகளை மேற்கொள்கிறது. இதன் பொருட்டு பின்வரும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

 

  1. தொழில் பிணக்குகள் சட்டம்
  2. தொழில் முடிவுறுத்தும் சட்டம்
  3. தொழிற்சங்க கட்டளைச்சட்டம்
  4. பணிக்கொடை கொடுப்பனவுச் சட்டம்

மேற்படிசட்டதிட்டங்களை உரிய வாறு நடைமுறைப்படுத்துவதற்காக இப் பிரிவு பல்வேறு கிளைகளைக்கொண்டு இயங்குகின்றது.


1.   தொழில்உறவுகள் கிளை
2.   தொழில் முடிவுறுத்தும் அலகு
3.   தொழிற்சங்கப்பிரிவு கிளை
4.    சமூக கலந்துரையாடல் மற்றும் வேலைத்தரலக் கூட்டுறவுக்கிளை  

ஒரு நாட்டில் தொழில் பிணக்குகள் ஏற்பட்டவுடன் சகல தரப்புகளும்இணைந்து அதற்கான உடனடி தீர்வு காணல் வேண்டும். அதன் மூலம் தொழில் கொள்வோர்‚ தொழில்புரிவோர் ஆகிய இரு தரப்புகளிடையே சிறந்த உறவை பேணிச்செல்லலாம்.  நாட்டில் வேலைநிறுத்தம் மற்றும் தொழில் பிணக்குகள் ஆகியவற்றை தீர்ப்பதன் ஊடாக ஊழியர்கள் நலன்அடையலாம்.

 

  1. தொழில் பிணக்குகள் சட்டத்தில் அத்தியாயம் 131 பிரிவு 4(1) தொடக்கம்ஏற்புடையதாகும்.
  2. தொழில் பிணக்குகள் சட்டத்தில் அத்தியாயம் 131 பிரிவு 12(1) தொடக்கம்ஏற்புடையதாகும்.
  3. தொழில் உறவுகள் பிரிவால் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு ஏற்புடையதான அறிக்கைகள்மற்றும் சாட்சி சாராம்சங்கள்
  4. 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தில் கூட்டுஉடன்படிக்கைகளை முடிவுறுத்தும் அறிவித்தல்
  5. தீர்பாளர் மூலம் தீர்வுக்கு வருதல்/தொழிந்   நீதிமன்றம்.
  6. 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் அத்தியாவசியமானகைத்தொழில்களை சேவையிலிருந்து நீக்குவதற்கு கருதினால் மேற்கொள்ள வேண்டிய அறிவிப்பு
  7. 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் அத்தியாவசியமானதொழில்களில் வேலை நிறுத்தம் செய்வதற்கு கருதினால் மேற்கொள்ள வேண்டி அறிவிப்பு
  8. 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம்  பிரிவு31(B)  இன் கீழ் செய்யப்படும் கோரிக்கை
  9. 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம்  பிரிவு10(9) இன் கீழ் தொழில் நீதிமன்றத்திடம் செய்கின்ற மேன்முறையீடு
  10. 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ்  கொழும்பு  தொழில் நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள வேண்டிய அறிவிப்பு
  11. 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம்  தீர்ப்பாளர்/தொழில் நியாய சபைகள்
  12. 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டம் - சாட்சி அழைப்பு
  13. தொழில் பிணக்குகள் சட்டத்தின் அத்தியாயம் 131   பிரிவு 43( அ) 1 இன் கீழ்அறிவிப்பு.

 

தொழில் உறவுகள் பிரிவுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசிஇலக்கங்கள்\

 

பதவி

தொ. பே இல

தொழில் ஆணையாளர் (தொழில் உறவுகள்)

+94112582608

பிரதி தொழில் ஆணையாளர்

+94112368502

உதவி தொழில் ஆணையாளர்

+94112369484

 
வெள்ளிக்கிழமை, 07 ஏப்ரல் 2017 07:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது