முதற்பக்கம் பிரிவுகள் நிர்வாகப் பிரிவு

நிர்வாகப் பிரிவு

அறிமுகம்

நிர்வாகப்பிரிவானதுதொழில் திணைக்களத்துடன் தொடர்பான  பொது நிர்வாகங்கள்  அனைத்தையும் கையாள்கின்றது.   

பிரதான பணிகள்

  • தொழில் திணைக்களத்திற்கான நிலத்தைக்கொள்வனவுசெய்தல், கட்டிடத்தை அமைத்தல் மற்றும் பராமரித்தல் மற்றும்  கட்டிடங்கள் நிலங்களுக்கான  வாடகை கொடுப்பனவைசெய்தல்.
  • கட்டிடச் சேவைகள்  மற்றும் பராமரிப்புகளுக்கான கட்டணங்களை செலுத்துதல்.
  • தொழில் திணைக்களத்தால் உடைமையாக்கப்பட்ட வாகனங்களைப் பராமரித்தல் மற்றும் போக்குவரத்து வசதிகளுடன் தொடர்பான கடமைகளைச் செய்தல்.
  • தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும்     தகவல்கள் தொடர்பான கோரிக்கைகளுக்குப் பதிலளித்தல்.
  • அக்ரகார காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்புறுதிக்கோரல் விண்ணப்பங்கள் மற்றும் முறைப்பாடுகளை காப்புறுதி  நிறுவனத்திற்கு அனுப்புதல்.
  • திணைக்கள அலுவலர்களுக்கான ஆள் அடையாள அட்டைகளை வழங்குதல்.
  • பதவிநிலை அலுவலர்களுக்கான விடுமுறைக் கொடுப்பனவுகள், பயணச்செலவுகள் மற்றும் மாதாந்த முன் நிகழ்ச்சித் திட்ங்களுக்கும் அனுமதி வழங்குதல் மற்றும் அதிகப்படியான மேலதிக நேர வேலை கோரிக்கைகளுக்கான அனுமதியைப் பெறுவதற்காக அமைச்சின் செயலாளருக்கு  அனுப்புதல்.
  • தபாலில் நாளாந்தம் பெற்றுக் கொள்ளும் கடிதங்களை ஒவ்வொரு பிரிவிற்கும் அனுப்புதல் மற்றும் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பெற்றுக் கொள்ளும் கடிதங்களை தபால் திணைக்களத்திற்கு அனுப்புதல்.
  • வெளிப் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்புச் சேவையை நிர்வகித்தல்.
  • தொழில் திணைக்களத்தின் யாவத்தை அலுவலக வளவினுல் உள்ள  திணைக்களத்திற்குச் சொந்தமான அச்சகத்தை நிர்வகித்தல்.
  • தொழில் திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற விசட நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல்.

தொடர்புகளுக்கான விபரங்கள்

மேலதிக தொழில் ஆணையாளர் நாயகம்(நிர்வாகம்

011 - 2581970

தொழில் ஆணையாளர் (நிர்வாகம்)

011 - 2368253

பிரதித் தொழில் ஆணையாளர் (நிர்வாகம்)

011 - 2368063

உதவித் தொழில் ஆணையாளர் )(நிர்வாகம்

011 - 2582709

 

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023 04:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது