முதற்பக்கம் எமது சேவைகள்
நிரந்தர உடலியலாமை காரணமாக சேவையில் இருந்து ஓய்வூ பெறல்

விண்ணப்பதாரி நிரந்தரமான உடல் கோளாறு காரணமாக சேவையில் இருந்து விலகும் வேளையில் ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெற்றுக்கொள்ள ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    அரசாங்க வைத்திய உத்தியோகத்தரொருவரால் உடலியலாமை நிலைபற்றி சுகாதாரம் 307 ஆம் இலக்க மாதிரிமூலமாக நற்சாட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
    சுகாதாரம் 307 ஐ மு.ப. 8.00 - 6.00 வரையான அலுவலக நேரத்தில் பெற்றுக்கொடுத்தவிடத்து ஆ பத்திரம் விநியோகிக்கப்படும்.

மேற்படி தகைமைகள் அற்ற விண்ணப்பப் பத்திரங்கள் நிராகரிக்கப்படும்.
பின்வரும் விடயங்கள் காரணமாகவூம் விண்ணப்பப் பத்திரம் நிராகரிக்கப்படும்.
    சுகாதாரம் 307 மாதிரி மூலமாக அரசாங்க வைத்தியரொருவரின் நற்சாட்சிப்படுத்தல் இல்லாதவிடத்து.
    சரியான தகவல்களை வழங்கத் தவறும் பட்சத்தில்.
    தகைமைகளை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில்.
    தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்க இயலாதவிடத்து.

சமர்ப்பிக்கும் வழிமுறை
    அனைத்து விண்ணப்பங்களும் தொழில் ஆணையாளர் ஊழியர் சேமலாபநிதியப் பிரிவூக்குச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    விண்ணப்பப் பத்திரத்துடன் அவசியமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் பத்திரம்.
மு விண்ணப்பப் பத்திரம்

செயற்பாடு கட்டம் கட்டமாக
படிமுறை 1:சுகாதாரம் 307 அறிக்கையை அரசாங்க வைத்திய உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளல்
படிமுறை 2:விண்ணப்பதாரி ஊழியர் சேமலாப அலுவலகத்திடமிருந்து ஆ பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளல்.
படிமுறை 3:வைத்திய சபையின் அறிக்கையைக் கோரல்.
படிமுறை 4:பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை தொழில்தருநரின் நற்சாட்சிப்படுத்தலுக்காகச் சமர்ப்பித்தல்.
படிமுறை 5:இலங்கை மத்திய வங்கிக்கு ஊழியர் சேமலாப நிதியம் செலுத்தப்படுவதை விதப்புரை செய்து அனுப்புதல்.
படிமுறை 6:நிதியம் விடுவிக்கப்படுதல்.
படிமுறை 7:வைத்திய சபையினால் முழுமையான உடலியலாமை நிலை உறுதிப்படுத்தப்படாவிட்டால் விண்ணப்பப் பத்திரம் நிராகரிக்கப்படும்.

சேவைக்காக எடுக்கும் காலம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம் அவசியமான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படுமிடத்து வைத்திய சபையின் அறிக்கை கிடைத்து 2 வார காலம் செல்லும்.

ஆற்றுப்படுத்தப்படும் நேரங்கள்
கிழமை நாட்களில்         - திங்கள் முதல் வெள்ளி வரை
நேரம்                - மு.ப. 9.00 முதல் பி.ப. 04.00 வரை
விடுமுறை நாட்    கள்          - அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறைத் தினங்கள்

சேவை தொடர்பான செலவினங்கள்:
இதன் பொருட்டு எந்த விதமான கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

துணை ஆவணங்கள்
மு விண்ணப்பப் பத்திரம்
பிறப்புச் சான்றிதழ் 
பிறப்புச் சான்றிதழ் இல்லாதவிடத்து கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளரின் அனுமான வயதுச் சான்றிதழ்.
சேவையாற்ற இயலாதென்பது குறிப்பிடப்பட்ட வைத்திய அறிக்கை.

சேவைப் பொறுப்புக்கள்

பதவி   
பெயர்   
பிரிவூ   
முகவரி   
தொலைபேசி இலக்கம் பக்ஸ்
உதவித் தொழில் ஆணையாளர்கள் (நிருவாகம்) ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ
356 காலி வீதி கொழும்பு 03
2564511
2564504
2564504
பிரதி ஆணையாளர் திரு. னு.P.மு.சு. வீரக்கோன ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ
356 காலி வீதி கொழும்பு 03.
2564511
2564504
2564504

விசேட தருணங்கள்
விசேட தருணங்கள் கிடையாது
மாதிரி தரவூகளுடனான விண்ணப்பப் பத்திரங்கள்

செவ்வாய்க்கிழமை, 06 மார்ச் 2018 06:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது